சினிமா செய்திகள்
சிம்புவின் ‘ஈஸ்வரன்’ வசனத்துக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளாரா தனுஷ்..?
நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் ‘ஈஸ்வரந் அசுரன்’ வசனத்துக்கு தனது ட்விட்டரில் நடிகர் தனுஷ் பதிலடி கொடுத்துள்ளார் என தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் கடந்த ஜனவரி 13-ம் தேதி பொங்கல் பண்டிகைக்காக வெளியானது. பெரிய சாதனை எதுவும் ஈஸ்வரன் நிகழ்த்த வில்லை என்றாலும் அந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு வசனம் சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர்கள் இடையே பெரும் போர்ச் சூழலையே உருவாக்கி இருந்தது. ஈஸ்வரன் படத்தில் சிம்பு, “நான் அழிக்க வந்த அசுரன் இல்லடா… காக்க வந்த ஈஸ்வரன்” என்னும் வசனத்தைப் பேசியிருப்பார்.
இந்த வசனம் படம் வெளியாவதற்கு முன்பே ப்ரோமோ ஆக வெளியிடப்பட்டு வைரல் ஆனது. இதற்காகத் தான் தற்போது நடிகர் தனுஷ் பதிலடு கொடுத்துள்ளார் என தனுஷ் ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர். நேற்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பயோ-வை ‘அசுரன்’ என மாற்றியுள்ளார். இதனால், தனுஷ் நடிப்பின் அசுரன் தான் என அவரது ரசிகர்கள் தனுஷ், ஜெகமே தந்திரம், அசுரன், கர்ணன் என தனுஷ் சார்ந்த அத்தனைப் பெயர்களையும் ட்விட்டரில் தேசிய அளவிலான ஹேஷ்டேக் ஆக ட்ரெண்ட் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.