சினிமா செய்திகள்

மீண்டும் பத்து வருஷ வயசை குறைத்த தனுஷ்!

Published

on

தாடி வைத்தால் பெரிய ஆளாகவும், தாடி, மீசையை எடுத்தால் பத்து வயசு குறைந்து என்றுமே ஸ்வீட் 16 லுக்கிற்கு வர நடிகர் தனுஷால் மட்டும் எப்படி சாத்தியப்படுகிறது என்ற கேள்விக்குறி சினிமா வட்டாரத்தில் எப்போதுமே இருக்கும் ஒன்றுதான்.

ஜூலை 28 1983ல் பிறந்த தனுஷ் நேற்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடினார். சமூக வலைதளங்களில் தனுஷ் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.

மேலும், ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட்டாக தனுஷின் அடுத்த படமான ‘பட்டாஸ்’ படத்தோட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

மீண்டும் 16 வயசு தனுஷா அவரால் எப்படி ஆக முடிந்தது என்ற கேள்வி மீண்டுமொரு முறை எழுந்தது.

எதிர்நீச்சல், கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு பெயரே பட்டாஸ் என வைத்து பட்டையை கிளப்பியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version