சினிமா செய்திகள்

Vaathi : சிக்கலில் சிக்கிய வாத்தி படம்!

Published

on

’திருசிற்றம்பலம்’ ‘நானே வருவேன்’ வெற்றிக்குப் பிறகு தனுஷ் தற்போது ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளர்.

இந்நிலையில் வாத்தி படத்தின் தயாரிப்பின் நிறுவனம் படத்தின் டிரெய்லரை பிப்ரவரி 8ம் தேதி வெளியிட்டது. கல்வி அரசியலை கேள்வி கேட்கும் வகையில் இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது. ‘கல்வில கிடைக்கற காசு அரசியல்ல கிடைக்காது’போன்ற வசனங்கள் கவனமீர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

இந்நிலையில் தற்போது ஆசிரியர்கள் தரப்பிலிருந்து படத்தின் பெயருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. “வாத்தி” என்ற படத்தின் பெயர் பல லட்சக்கணக்கான ஆசிரியர்களின் மனதை வேதனைப்படுத்திவுள்ளது என்று புதுக்கோட்டை  முன்னாள் ஆசிரியரும் முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலருமான முனைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

மேலும் புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அதில் “இதே படம் தெலுங்கில் “சார்” என்ற பெயரில் வெளியாகிறது. தமிழில் மட்டும் ஏன் தரக்குறைவான வார்த்தையில், ஆசிரிய சமூகத்தை அவமதிக்கும் வகையில் “வாத்தி” என்று பெயரிட்டு வெளியிடப்படுகிறது. இதைக் கண்டிப்பதோடு படத்தின் பெயரை ” வாத்தியார்” என்றோ, அல்லது தெலுங்கில் வைத்ததுபோல “சார்” என்றோல் படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும்” என்று கண்டனம் தெடிவித்துள்ளார்.

முன்னதாக, படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வெளியீடு தள்ளிப் போனதால் பிப்ரவரி 17 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version