சினிமா செய்திகள்

தனுஷ் பட கிளிம்ப்ஸ் வீடியோவில் தனுஷ் இல்லையா? ரசிகர்கள் கொந்தளிப்பு!

Published

on

தனுஷ் நடித்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் அதில் தனுஷின் காட்சிகள் இல்லாமல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.

தனுஷ் ஏற்கனவே ஹாலிவுட் படமொன்றில் நடித்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ’தி க்ரே மேன்’ என்ற ஆங்கில படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை ஆன்டணி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ சகோதரர்கள் இயக்கி உள்ளனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த வீடியோவில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தரேயன் ஹோஸ்லிங், க்ரிஷ் ஈவன்ஸ் ஆகிய இருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர் என்பதும் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சியை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தனுஷின் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

ந்த நிலையில் தனுஷ் காட்சிகள் உள்ள கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகும் நிலையில் அவர் நடித்த அடுத்த திரைப்படமான தி க்ரே மேன்’ படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version