சினிமா செய்திகள்

பாலிவுட் திரைப்படத்தில் மதுரை இளைஞராக தனுஷ்..!- அக்‌ஷய் குமார் புது அப்டேட்

Published

on

பாலிவுட் திரைப்படமான அத்ரங்கி ரே படத்தில் மதுரை இளைஞராக நடிகர் தனுஷ் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஹிந்தியில் நடிகர் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் ஆகியோரது நடிப்பில் விரைவில் அத்ரங்கி ரே என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படம் இரு வேறு காலகட்டங்களில் வட இந்தியா, தென்னிந்தியா ஆகிய இரு வேறு துருவங்களில் நடைபெறும் கதைகளைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இதில் தனுஷ் மதுரை இளைஞராக இந்தப் படத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக தனுஷ்- சாரா அலி கான் ஜோடி இணைந்து நடிக்கும் பகுதிகள் மதுரையில் படமாக்கப்பட்டுள்ளது. மதுரை ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதால் தற்போது அக்‌ஷய் குமார் உடனான மன்னர் கால கதைக்காக பிஹார் சென்றுள்ளார் சாரா அலி கான். இதில் மன்னராக வரும் அக்‌ஷய் குமாரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version