தமிழ்நாடு

நடிகர் தனுஷூக்கு 48 மணி நேரம் கெடு கொடுத்த நீதிமன்றம்!

Published

on

பிரபல நடிகர் தனுஷ் தான் வாங்கிய ஆடம்பர காருக்கு 48 மணி நேரத்தில் வரியை கட்ட வேண்டும் என நீதிமன்றம் கெடு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் தனுஷ் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது தனுஷை நீதிபதி சரமாரியாக விமர்சனம் செய்தார்.

பால்காரர் கூட பெட்ரோல் போடும்போது வரி செலுத்துகிறார் என்றும் ஆனால் உங்களால் இறக்குமதி செய்தது காருக்கு வரி செலுத்த முடியாதா என்றும் அடுக்கடுக்கான கேள்வியை கேட்டார். மேலும் தனுஷின் தான் நடிகர் என்பதை மறைத்து தனது மனுவில் ஏன் குறிப்பிட்டார் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதனையடுத்து இந்த வழக்கு இன்று மதியம் மீண்டும் விசாரணைக்கு வரும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சற்று முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தனுஷ் தனது சொகுசு காருகான ரூ.30.30 லட்சத்தை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கை முடிக்க வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி இந்த உத்தரவின் போது நீதிபதி சில கருத்துக்களையும் தெரிவித்தார். சொகுசு கார்களுக்கு வரி விலக்கு கோருவது போன்ற வழக்குகள் நீதிமன்றத்தின் நேரம் வீணாகிறது என்றும் இனிமேல் மனு தாக்கல் செய்யும்போது மனுதாரர்கள் தங்களுடைய மனுவில் குறிப்பிட வேண்டிய தகவல் இல்லை என்றால் அதை ஏற்க கூடாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Trending

Exit mobile version