சினிமா செய்திகள்

‘The Gray Man’ ஹாலிவுட் படத்தில் பங்கேற்க அமெரிக்கா விரைந்த தனுஷ் – வைரல் வீடியோ!

Published

on

தி கிரே மேன் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ், அமெரிக்கா புறப்பட்டுள்ளார். அவர் சென்னையிலிருந்து அமெரிக்கா செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மார்வெல் நிறுவனத்திற்காக எவெஞ்சர்ஸ் மற்றும் பல்வேறு சூப்பர் ஹீரோ படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் அடுத்ததாக ‘தி கிரே மேன்’ என்கிற ஹாலிவுட் படத்தை எடுக்கிறார்கள். நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்பட உள்ளது.

இதில் கேப்டன் அமெரிக்கா ரோலில் நடித்த கிரிஸ் இவான்ஸ், மற்றொரு பிரபல ஹாலிவுட் நடிகரான ரியன் காஸ்லிங் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் தனுஷுக்கும் இந்தப் படத்தில் முக்கிய ரோல் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகில் இருந்து உலக அரங்கில் தனுஷ் கலக்க உள்ளதால், அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தத் திரை ரசிகர்களுமே பெருமிதம் கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் வெளிநாட்டுப் படங்களிலும், பாலிவுட் திரைப்படங்களிலும் தனுஷ் நடித்துப் பெயர் பெற்றிருந்தாலும், இதுவே அவரின் முதல் ஹாலிவுட் என்ட்ரி. முதல் துவக்கமே மாஸ் துவக்கமாக தனுஷுக்கு அமைந்துள்ளது.

 

Trending

Exit mobile version