சினிமா செய்திகள்

என்னையே வெளியே போக சொல்றியா? லதாவிடம் சவால் விட்டாரா தனுஷ்?

Published

on

சமாதானம் பேசுவதற்காக ரஜினி வீட்டிற்கு தனுஷ் சென்றதாகவும் ஆனால் லதா ரஜினிகாந்த அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் இதனை அடுத்து தனுஷ் கோபப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளை திருமணம் செய்து கொண்ட தனுஷ்க்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது என்பதும் திருமணத்துக்குப் பின்னர்தான் அவர் மெச்சூரிட்டியாக படங்களை தேர்வு செய்து நடித்தார் என்பதும் தேசிய விருதுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .

ஆனால் திடீரென மனைவி ஐஸ்வர்யாவை திடீரென பிரிவதாக தனுஷ் அறிவித்தது ரஜினி குடும்பத்தினர்களை கடும் அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் தனுஷிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்த போது தனுஷ் அதற்கு ஒத்து வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து முக்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தனுஷை வைத்து படம் எடுக்க கூடாது என லதா ரஜினிகாந்த் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் சமரசமாக பேசலாம் என்று தனுஷ், ரஜினி வீட்டிற்கு சென்றதாகவும் ஆனால் லதா ரஜினிகாந்த அவரை அனுமதிக்கவில்லை என்றும், மாறாக விரட்டி அடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தனுஷ் என்னையே வெளியே போக சொல்றியா என்னுடைய சினிமா கேரியரை யாராலும் தடுக்க முடியாது என்று ஆவேசமாக சவால் விட்டு திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் வதந்தி என்றும், தனுஷ், ரஜினி வீட்டிற்கே செல்லவில்லை என்றும் தனுஷ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

 

Trending

Exit mobile version