சினிமா செய்திகள்

ஒப்புக்கொள்ளாத தனுஷ்… விடாது துரத்திய நெட்ஃப்ளிக்ஸ்..!- ஜகமே தந்திரம் அப்டேட்

Published

on

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியீட்டுக்குத் தயாராக உள்ள ஜகமே தந்திரம் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தான் வெளியாக உள்ளதா என்னும் கேள்விக்கு விடை தெரிந்துள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியீட்டுக்கு நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருக்கும் படம் ஜகமே தந்திரம். ஜகமே தந்திரம் போஸ்டரில் இருந்து படப்பிடிப்பு புகைப்படங்கள், பாடல்கள், பாடல் வீடியோக்கள் வரை என அத்தனையும் வைரல் ஆகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தே காணப்படுகிறது.

இந்தப் படம் தியேட்டர்களுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரும் தியேட்டரில் வெளியாகப் போவதில்லை என்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இடையில் ரசிகர்கள், சினிமா பணியாளர்கள், தியேட்டர் பணியாளர்கள் என அத்தனை பேருக்கும் ஏதுவாக ஜகமே தந்திரம் திரை அரங்கில் வெளியாக வேண்டும் என்பதே ஆசை என நடிகரும் தனுஷ் பொதுவெளியிலேயே தெரிவித்தார்.

ஆனால், நெட்ஃப்ளிக்ஸ் தளம் ஜகமே தந்திரம் படத்தைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என பயங்கரமாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்கு பெரிய வரவேற்பு இல்லை. அமேசான் ப்ரைம் தளமே பிராந்திய மொழிகளில் முதலிடத்தில் உள்ளது. இந்த சூழலில் தனுஷின் தமிழ்ப் படம் முதல் ஹாலிவுட் படம் வரையில் நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்து வெளியிடும் போது தமிழ் ரசிகர்களே ஈர்க்கலாம் என்பதே நெட்ஃப்ளிக்ஸ்-ன் திட்டம் எனக் கூறப்படுகிறது.

இதனால் மிகப்பெரிய தொகை கொடுத்து YNot ஸ்ட்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து நெட்ஃப்ளிக்ஸ் ஜகமே தந்திரம் படத்தைக் கைப்பற்றியுள்ளது. இதனால் நிச்சயமாக ஜகமே தந்திரம் நெட்ஃப்ளிக்ஸ்-ல் தான் வெளியாகும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version