சினிமா செய்திகள்

இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சையான கருத்து கூரிய வாத்தி இயக்குநர்!

Published

on

தனுஷ் நடிப்பில் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள வாத்தி திரைப்பட இயக்குநர் வெங்கி அட்லுரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படங்களுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் ரிலீஸ் ஆகியுள்ள படம் வாத்தி.

ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த திரைப்படம் தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி மக்களை ஏமாற்றி பணத்தை வணிகமாக மாற்றியுள்ளது என்ற கருத்தைக் கூறும் விதமாகப் படம் அமைந்துள்ளது.

வாத்தி படத்தின் ப்ரோமஷனில் ஈடுபட்டு வரும் அப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்தில் செய்துள்ள நேர்கானனில் நீங்கள் ஒன்றிய கல்வித் துறை அமைச்சரானால் என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது.

#image_Dhanush In Vaathi Movie Directors Controversial Comment About Reservationtitle

அதற்குப் பதில் அளித்த அவர், ஒருவேலை நான் ஒன்றிய கல்வித் துறை அமைச்சரானால், சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடுவேன். இட ஒதுக்கீட்டைப் பொருளாதார அடிப்படையில் வழங்க வேண்டும். சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என மாற்றுவேன் என தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஆதரவு அளித்து வரும் பலர் சாதி ரீதியிலான கணக்கெடுப்பு நடத்தப்படாத சூழலில், சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டையும் ஒழித்துவிட வேண்டும். எல்லா சாதிகளிலும் ஏழைகள் இருக்கிறார்கள் என கருத்து கூறி வருகின்றனர்.

மறுபுறம், பொருளாதார ரீதியாலான இட ஒதுக்கீடு வந்தால் அது எப்படிச் சரியாக இருக்கும். இன்று குறைவாக இருக்கும் ஒருவரின் சம்பளம் அடுத்த சில நாட்களில் பல மடங்கு உயரும். இன்று அதிகமாக வருமானம் உள்ள ஒருவரின் சம்பளம் திடீரென குறைந்து விடும். இப்பை இருக்கையில் அது எப்படிச் சாத்தியமாகும்.

வருமான சான்றிதழ் பெரும் பலர் தங்களது வருமானத்தை எப்போதும் மறைக்கும் நிலையில், பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு மட்டும் எப்படி நியாயமானதாக இருக்கும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version