சினிமா செய்திகள்

முதல் தெலுங்கு திரைப்படத்தின் சூப்பர் அப்டேட் தந்த தனுஷ்!

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் பாலிவுட் திரை உலகிலும், ஹாலிவுட் திரை உலகிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் தனுஷ் நடிக்கவிருக்கும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை வெங்கி அட்லுரி என்பவர் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது முதல் நேரடி தெலுங்கு திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை காலை ஒன்பது முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனை அடுத்து தனுஷ் ரசிகர்களுக்கு நாளை காலை சரியான விருந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ’அட்ராங்கி ரே’ என்ற பாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், ’தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் ’திருச்சிற்றம்பலம்’ என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் அவர் விரைவில் ’நானே வருவேன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷின் தெலுங்கு படத்தின் சூப்பர் அப்டேட் வந்ததை அடுத்து தனுஷ் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

Trending

Exit mobile version