சினிமா செய்திகள்

’ராட்சசன்’ ராம்குமார் இயக்கத்தில் தனுஷ்!

Published

on

2018ம் ஆண்டில் இந்திய அளவில் ஐஎம்டிபி ரேட்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்து ராட்சசன் திரைப்படம் பலரது மனங்களை ஆட்சி செய்து வருகிறது.

இந்த படத்தின் இயக்குநர் ராம்குமார், தனுஷின் 35வது படத்தை இயக்கவுள்ளார் என்ற செய்தியை படத்தை தயாரிக்கப்போகும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நேற்று 2 அதிரடி அறிவிப்புகளாக அறிவித்தது.

தல அஜித்தின் படங்களை தொடர்ந்து தயாரித்து வந்த சத்யஜோதி நிறுவனம், திடீரென தனுஷின் இரண்டு படங்களை தயாரிக்க என்ன காரணம் என்ற கேள்வியைத் தான் தற்போது கோலிவுட்டின் மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு தனுஷின் உண்டர்பார் தயாரித்த காலா, மாரி 2 படங்கள் வசூலை ஈட்ட தவறியதால், தனுஷ் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நாடியுள்ளார் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

தனுஷின் 35வது படத்திற்கு முன்னதாக அவரது 34வது படத்தை எதிர்நீச்சல், கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்த படத்தையும் சத்ய ஜோதி பிலிம்ஸே தயாரிக்கின்றது.

புத்தாண்டு தினமான நேற்று இந்த இரு அதிரடி அறிவிப்புகளும் வெளியாகி தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்தது.

எல்லாம் ஓகே எனை நோக்கி பாயும் தோட்டா எப்பதான் தனுஷ் ரிலீசாகும்?

seithichurul

Trending

Exit mobile version