சினிமா செய்திகள்

‘கர்ணன்’ டீசர் ரிலீஸ் தேதி-நேரம் அறிவிப்பு

Published

on

‘கர்ணன்’ டீசர் ரிலீஸ் தேதி-நேரம் அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் டிரைலர் மார்ச் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மார்ச் 23-ம் தேதி இரவு 7 மணிக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்

மேலும் கர்ணன் படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பதும் கையில் வாள் வைத்துக் கொண்டு கம்பீரமாக நிற்கும் தனுஷின் இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Trending

Exit mobile version