சினிமா செய்திகள்
ஆகஸ்ட்15ல் ரிலீஸ் ஆகும் தனுஷின் திரைப்படம்: ரசிகர்கள் மகிழ்ச்சி!
பிரபல நடிகர் தனுஷ் நடித்த திரைப்படம் ஒன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி தொலைக்காட்சியில் வெளியாக இருப்பதை அடுத்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’கர்ணன்’. இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் 60 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து திரை விமர்சகர்களும், ஊடகங்களும் பாராட்டுக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்த இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கர்ணன் திரைப்படம் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாலை 6 மணிக்கு கர்ணன் திரைப்படம் ஜீ டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திரையரங்குகளில் ஏற்கனவே பார்த்தவர்களும் இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்களும் தனுஷ் படத்தை தொலைக்காட்சியில் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Blockbuster #Karnan television premiere on August 15th 6PM in @ZeeTamil. @dhanushkraja @VetriMaaran pic.twitter.com/LqQnqrxyJx
— Johnson PRO (@johnsoncinepro) August 1, 2021