சினிமா செய்திகள்
தனுஷின் ‘கர்ணன்’ 4வது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது நான்காவது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது
தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’கண்டா வரச்சொல்லுங்க’ ’பண்டாரத்தி புராணம்’ மற்றும் ’திரெளபதியின் முத்தம்’ ஆகிய மூன்று பாடல்கள் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து வெளியாகி அனைத்து பாடல்களும் ஹிட் ஆயின என்பது தெரிந்ததே
இந்த நிலையில் நாளை இந்த படத்தின் நான்காவது பாடலான கர்ணனின் யுத்தம் என்ற பாடல் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்த இந்த பாடலும் ஏற்கனவே வெளியான மூன்று பாடல்களை போல் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Delighted to announce the next single of #Karnan #Paadal4 #UttraDheengaYeppov to be out tomorrow @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh @thinkmusicindia @ZeeTamil pic.twitter.com/EZxkpPX9vb
— Kalaippuli S Thanu (@theVcreations) March 30, 2021
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடதக்கது
ஏற்கனவே ஆடுகளம், அசுரன் ஆகிய திரைப்படங்களுக்கு தேசிய விருது வாங்கிய தனுஷ், இந்தத் திரைப்படத்திற்காக மீண்டும் ஒரு தேசிய விருது பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.