சினிமா செய்திகள்

’ஜெகமே தந்திரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு தாமதம் ஏன்?

Published

on

தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த படத்திற்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்ட ’ஜெகமே தந்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ’ஜெகமே தந்திரம் ரிலீஸ் அறிவிப்பு காலதாமதம் ஏன் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. கர்ணன் திரைப்படம் திரையரங்குகளிலும் ’ஜெகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியிலும் வெளியாக உள்ளது. கர்ணன் திரைப்படத்திற்கு முன்பாக ’ஜெகமே தந்திரம் ரிலீஸானால் கர்ணன் திரைப்படத்திற்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தினால் ’ஜெகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை இப்போது வெளீயிட வேண்டாம் என தனுஷ் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

எனவே ஏப்ரல் 9ஆம் தேதி கர்ணன் திரைப்படம் ரிலீஸ் ஆன பின்னர் ஒரு சில நாட்கள் கழித்து ஓட்டிட்டு ’ஜெகமே தந்திரம் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டது என்பதும் ரிலீஸ் தேதியும் உறுதி செய்யப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version