சினிமா செய்திகள்

‘D43’ படப்பிடிப்பு ஸ்டில் வைரல்: கார்த்திக் நரேன் இருக்கின்றாரா? இல்லையா?

Published

on

தனுஷ் நடித்துவரும் ‘D43’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இது இறுதிகட்ட படப்பிடிப்பு என்பதால் படக்குழுவினர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ‘D43’ படத்திலிருந்து இயக்குனர் கார்த்திக் நரேன் விலகி விட்டதாகவும் அதற்கு பதிலாக தனுஷ் இந்த படத்தை இயக்கி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலை படக்குழுவினர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்து வந்தாலும் இந்த வதந்தி வேகமாக பரவி வருவது நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் ‘D43’ படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் இருவரும் அடுத்த காட்சி குறித்து ஆலோசனை செய்வது போன்று உள்ளது. இதனை அடுத்து கார்த்திக் நரேன் ‘D43’ படத்தில் இருந்து விலகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘D43’ படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் விலகுவார் என்று வதந்தி அர்த்தமற்றது என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். மேலும் தனுஷூடன் அவர் மேலும் ஒரு படத்தில் பணிபுரிவார் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் ஜோடியாக முதல்முதலாக மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version