சினிமா செய்திகள்

தனுஷின் ‘D43′ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: இணையத்தில் வைரல்!

Published

on

பிரபல நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் 43வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் ஏற்கனவே டுவிட் ஒன்றை பதிவு செய்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் சத்யஜோதி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷின் 43வது படத்தின் டைட்டில் ’மாறன்’ என்று அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான ஸ்டைலில் தனுஷ் இந்த போஸ்டரில் உள்ளதை அடுத்து இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்தின் பாடல்கள் மிக விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தை அடுத்து தனுஷ் தனது சகோதரர் செல்வராகவன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அதனை அடுத்து தமிழ் தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version