சினிமா செய்திகள்
சாரா அலிகானுடன் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் தனுஷ்!
Training with thalaiva @dhanushkraja ✨ pic.twitter.com/MN3XhxlOCG
— Sara Ali Khan (@iam_SaraAliKhan) November 27, 2020
தமிழ் சினிமாவில் பிஸியாக உள்ள தனுஷ் அவ்வப்போது, பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ஹாலிவுட் படங்களில் கூட நடித்து வருகிறார்.
இப்போது டெல்லியில் பாலிவுட் படமான அற்றாங்கி ரே படப்பிடிப்பில் தனுஷ் நடித்து வருகிறார். தற்போது அற்றாங்கி ரே படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் அந்த படத்திற்காக ஒரு படலையும் தனுஷ் பாடியுள்ளார்.
இந்நிலையில் தனுஷ் அற்றாங்கி ரே படத்தின் நாயகி சாரா அலிகானுடன் இணைந்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தி படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி43, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி44, ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் என தொடர்ந்து படங்களை வரிசையில் வைத்துள்ளார் தனுஷ்.