சினிமா செய்திகள்

டிவிட்டரில் 1 கோடி பேர் பின்பற்றும் முதல் தமிழ் நடிகர்!

Published

on

டிவிட்டரில் முதல் முறையாகத் தமிழ் நடிகர் தனுஷை 1 கோடி பேர் பின்பற்றுவது சாதனையாகக் கூறப்பட்டு வருகிறது.

டிவிட்டரில் கமல்ஹாசன், ரஜினி, விஜய் உட்பட பல்வேறு நடிகர்கள் உள்ளனர். தங்களது முக்கிய அறிவிப்புகளை நடிகர்கள், நடிகைகள் டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதால், அவர்கள் ரசிகர்கள் மற்றும் பிறர் இவர்களைப் பின்பற்றுவது அதிகரித்து வருகிறது.

அப்படி நடிகர் தனுஷை 1 கோடி நபர்கள் பின்பற்றுவது புதிய சாதனையாக உள்ளது. இந்த சாதனை மூலம் முதல் முறையாக டிவிட்டரில் 1 கோடி பின்பற்றுவார்களைப் பெற்ற ஒரு நடிகர் என்ற பெருமையை தனுஷ் பெற்றுள்ளார்.

டிவிட்டரில் கமல் ஹாசனை 68 லட்சம் நபர்களும், ரஜினிகாந்த்தை 59 லட்சம் நபர்களும், விஜய்யை 32 லட்சம் நபர்களும் பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version