தமிழ்நாடு

விஜய்யை அடுத்து தனுஷ் மீதும் கடுமையான விமர்சனம் வைத்த நீதிபதி!

Published

on

தனுஷின் சொகுசு கார் வரி குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் இருந்து வந்த நிலையில் சற்று முன்னர் விஜய் போலவே தனுஷ் மீதும் கடுமையான விமர்சனங்களை நீதிபதி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
நுழைவு வரி குறித்த வழக்கை வாபஸ் பெறுவதாகவும், நுழைவு வரியை கட்ட தயார் என்றும் தனுஷின் வழக்கறிஞர் கூறிய நிலையில் இதற்கு நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்

வரியை செலுத்த வேண்டியது உங்கள் கடமை, நீங்கள் கட்டாயம் செலுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதி, ஆனால் மனுதாரர் தன்னுடைய மனுவில் எந்த ஒரு தகவலையும் ஏன் தெரிவிக்கவில்லை, தான் ஒரு நடிகர் என்பதை ஏன் அவர் குறிப்பிடவில்லை? என கண்டனம் தெரிவித்தார்

மேலும் ஒரு சோப்பு வழங்குபவர் கூட வரி செலுத்தி வருகிறார். பால் விற்கும் நபர் கூட பெட்ரோலுக்கு வரி செலுத்தி வருகிறார். இதற்காக ஒரு வழக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்ததில்லை. ஆனால் நடிகர்கள் மட்டும் ஏன் நீதிமன்றத்தை நாடுகிறார்கள் என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து இந்த வழக்கு மதியம் 2.30மணிக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் அப்போது தனுஷ் தரப்பில் ஏன் தாங்கள் விபரங்களை மறைத்தார்கள் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

seithichurul

Trending

Exit mobile version