கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அம்பயர்கள் விளையாடிய ஆட்டம்: நடிகர் தனுஷ் டுவிட்டரில் ஆவேசம்!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 10-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அம்பயர்கள் ஒருதலைபட்சமாக செயல்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ் இதுகுறித்து ஆவேசமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் தான் எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அம்பயர்கள் அவுட் இல்லாததை எல்லாம் அவுட் அளித்ததாகவும், ஒருதலைபட்சமாக அம்பயர்கள் நடந்துகொண்டதாகவும் சர்ச்சை எழுந்தது. சமூக வலைதளங்களில் இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் பிரபல தமிழ் நடிகர் தனுஷ் அம்பயர்களை விமர்சித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், எந்த சூழ்நிலையிலும் வெற்றிபெறக்கூடாது என அம்பையர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அம்பையர்களுக்கு வாழ்த்துகள். மேற்கிந்திய தீவுகள் அணி நன்றாக போராடினீர்கள். அதே நிலையில் சிறந்த ஐசிசியின் புவர் அம்பையரிங்கையும் பார்க்க வேண்டும். அம்பையர்களின் ஒருதலைபட்சத்தயும்தான் என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version