சினிமா செய்திகள்

இந்த நடிகரின் பள்ளியில் தான் தனுஷ், விஜய்சேதுபதி படித்தார்களா? வைரல் வீடியோ

Published

on

தமிழ் நடிகர் ஒருவரின் பள்ளியில்தான் நடிகர்கள் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி படித்தார்கள் என்பது சமீபத்தில் வெளியான வீடியோவில் இருந்து தெரியவந்துள்ளது

நேற்று 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகருக்கான விருது தனுஷ்க்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும் கிடைத்தது. இதனை அடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றின் தாளாளர் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் சிவாஜி கணேசன் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான முதல் மரியாதை படத்தில் நடித்த திலீபன் என்பதும் தற்போது இந்த பள்ளியின் தாளாளராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த பள்ளியில்தான் தனுஷ் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் படித்தார்கள் என்றும் இருவரும் ஒரே ஆண்டில் தேசிய விருது பெறுவது எங்கள் பள்ளிக்கு மிகவும் பெருமைக்குரிய ஒன்று என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version