சினிமா செய்திகள்
தனுஷூக்கு மீண்டும் தேசிய விருது: அசுரனுக்கு கிடைத்தது!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்திற்காக தனுஷுக்கு தேசிய விருது கிடைத்தது என்பது தெரிந்ததே. தற்போது மீண்டும் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
சற்றுமுன்னர் 67வது தேசிய விருது அறிவிப்பு வெளியான நிலையில் தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படத்திற்காக தனுஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே படத்தை இயக்கியிருக்கும் வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டு வெளியான ’அசுரன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்தப் படம் வெளியான போதே இந்த படத்திற்கு இரண்டு அல்லது மூன்று விருதுகள் கண்டிப்பாக கிடைக்கும் என்று அனைத்து விமர்சனங்களும் கூறின என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் எதிர்பார்த்தபடியே சிறந்த நடிகருக்கான விருது தனுசுக்கும் சிறந்த இயக்குனருக்கான விருது வெற்றிமாறனுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது தமிழ் திரைப்பட உலகம் பெருமையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.