சினிமா செய்திகள்

கேரளாவில் தனுஷ், த்ரிஷாவுக்கு விருது!

Published

on

கேரளாவில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் வனிதா பிலிம் அவார்ட்ஸ் சார்பில், நடிகர் தனுஷ் மற்றும் நடிகை த்ரிஷாவிற்கு சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

வடசென்னை படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாலிவுட் நடிகை கரீனா கபூர் விருதினை வழங்கினார்.

96 படத்தில் ஜானுவாக நடித்து இந்திய அளவில் பலரது மனங்களை கவர்ந்த த்ரிஷாவிற்கு சிறந்த நடிகைக்காக விருது வழங்கப்பட்டது. ஆனால், விருது விழா நிகழ்ச்சிக்கு த்ரிஷா வராததால், அவரது தாயார் உமா அந்த விருதை பெற்றுக் கொண்டார்.

மேலும், ஒடியன் படத்திற்காக மோகன் லாலுக்கு சிறந்த நடிகர் விருதும், ஒடியன் மற்றும் ஆமி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மஞ்சு வாரியருக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version