சினிமா செய்திகள்

’மாநாடு’ ஓடிடி ரிலீஸ் தேதி: அதே தேதியில் ரிலீஸாகும் தனுஷ் படம்!

Published

on

சமீபத்தில் வெளியான ’மாநாடு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதே தேதியில் தனுஷ் படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வசூலை வாரி குவித்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படம் வரும் 24ஆம் தேதி சோனிலைவ் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிம்பு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் அதே டிசம்பர் 24ஆம் தேதி தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான ’அட்ராங்கி ரே’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரை உலகில் போட்டி நடிகர்களாக கூறப்படும் சிம்பு மற்றும் தனுஷின் திரைப்படங்கள் ஒரே நாளில் ஓடிடியில் ரிலீசாவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version