சினிமா செய்திகள்

தனுஷின் ‘நானே வருவேன்’ புதிய டைட்டில் இதுதானா?

Published

on

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் ’நானே வருவேன்’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை தயாரிப்பு தரப்பும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டைட்டில் மட்டுமின்றி கதையும் மாற்ற இருப்பதாகவும் முதலில் செல்வராகவன் கூறிய கதை தனுஷ்க்கு திருப்தி இல்லாததால் வேறு கதையை அவர் தயார் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கதை மாறிய நிலையில் இந்த படத்தின் புதிய டைட்டிலாக ’ராயன்’ என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ராயபுரத்தில் நடைபெறும் கதை என்பதால் ’ராயன்’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இது தனுஷ் கேரக்டரின் பெயர் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படம் மூன்று சகோதரர்கள் குறித்த கதை என்றும் இதில் தனுசுக்கு சகோதரர்களாக விஷ்ணு விஷால் மற்றும் ஆர்யா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இருவரிடமும் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்று தெரிகிறது.

மேலும் இந்த படத்தின் நாயகி கேரக்டரில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் இரண்டாவது வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version