சினிமா செய்திகள்

தனுஷ், ஐஸ்வர்யா மகன்கள் யாரிடம் வளர்வார்கள்: சட்டவல்லுனர்கள் கருத்து!

Published

on

18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சட்டப்படி பிரிய முடிவெடுத்ததை அடுத்து அவர்களது 15 வயது மற்றும் 11 வயது மகன்கள் யாரிடம் வளர்வார்கள் என்பது குறித்த கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இது குறித்து சட்ட வல்லுனர்கள் கூறும் போது தம்பதிகள் விவாகரத்து செய்யும் சமயத்தில் 18 வயதுக்கு குறைவான பெண் குழந்தையாக இருந்தால் அந்த பெண் குழந்தை பெரும்பாலும் அம்மாவின் வசமே ஒப்படைக்கப்படும். அதேபோல் 9 வயதுக்கு குறைவாக ஆண் குழந்தைகளாக இருந்தால் அந்த குழந்தைகளும் அம்மாவின் வசமே வழங்கப்படும் என்றும் வழக்கறிஞர்கள்: கூறுகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் ஆண் குழந்தைகள் 9 வயதை கடந்துவிட்டால் குழந்தைகளின் கருத்து கேட்கப்படும் என்றும் குழந்தைகள் யாரிடம் இருக்க விரும்புகிறார்களோ அவர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்படும் என்றும் ஒப்படைக்கப்படாத இன்னொருவருக்கு குழந்தையை அவ்வப்போது சந்திக்கும் உரிமை மட்டும் உண்டு என்றும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியின் 2 மகன்களும் 9 வயதை கடந்து உள்ளதால் அவர்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் அவர்கள் யாரிடம் வளர விரும்புகிறார்களோ அவர்களிடம் நீதிமன்றம் ஒப்படைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version