சினிமா செய்திகள்

தன்ஷிகாவின் உச்சகட்டம் ஃபர்ஸ்ட்லுக் வீடியோ ரிலீஸ்!

Published

on

நடிகை தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள உச்சகட்டம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வீடியோ வெளியாகியுள்ளது. பொதுவாக ஒரு படத்தினை அறிமுகம் செய்ய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்வது வழக்கமாக இருந்தது. அதன் பின்னர் மோஷன் போஸ்டர் கலாசாரம் உருவானது. தற்போது ஃபர்ஸ்ட்லுக் வீடியோ எனும் புதிய டிரெண்டை தன்ஷிகாவின் உச்சகட்டம் படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

ஆடையின்றி கால்களில் ரத்தக் கறையுடன் பயந்த தோற்றத்தில் தன்ஷிகா தனது மொபைலில் ஒரு வீடியோவை பார்த்து மிரள்வதாக இந்த ஃபர்ஸ்ட் லுக் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது. டி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சுனில் குமார் தேசாய் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. மூன்று மொழி ஃபர்ஸ்ட் லுக் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version