தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள்: உடனே பதிவு செய்ய டிஜிபி உத்தரவு!

Published

on

தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர் உடனடியாக உங்களது பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்துகொள்ள வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டது, மயிலாப்பூர் தொழிலதிபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது ஆகிய இரண்டு குற்ற சம்பவங்களிலும் வடமாநிலத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இதனை அடுத்து தமிழக மக்களின் பாதுகாப்புக்காக டிஜிபி இந்த நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி தமிழகத்தில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள், குல்பி, பானிபூரி விற்பனை செய்பவர்கள் உடனடியாக தங்களது விவரங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் தாங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் தங்கள் பெயர், முகவரி, செல்போன் எண் தாங்கள் பணி செய்யும் நிறுவனம் நிறுவனத்தின் உரிமையாளர் உரிமையாளரின் ,எண் உள்பட அனைத்து விபரங்களையும் அருகில் உள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவால் தமிழகத்தில் தாங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version