தமிழ்நாடு

சமூக வலைத்தளங்கள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு எடுத்த முடிவு: பின்தொடர்பவர்கள் அதிர்ச்சி!

Published

on

தமிழகத்தின் புதிய டிஜிபியாக பதவி ஏற்ற சைலேந்திரபாபு அவர்கள் சமூக வலைத்தள கணக்குகள் குறித்து எடுத்த முடிவால் அவரை பின்தொடர்ந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் டிஜிபியாக சமீபத்தில் சைலேந்திரபாபு பதவியேற்றுக்கொண்டார் என்ற நிலையில் உயர் பதவியில் இருப்பவர்கள் தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்குகளில் பயணிக்கக் கூடாது என்று முடிவெடுத்து தனது சமூக வலைதள கணக்குகளை முடக்கி உள்ளார். இதனால் அவரை பின்பற்றி வரும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வந்தார். உடற்பயிற்சி செய்வது எப்படி? குறிப்பாக நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் சைக்கிளிங் செல்லும் சைலேந்திரபாபு அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பதிவு செய்வார்.

அதேபோல் சாலையோரத்தில் விற்பனை செய்யும் நுங்கு, இளநீர் உள்ளிட்டவற்றை சாப்பிடும் அவர் மற்றவர்களும் இயற்கை உணவுக்கு திரும்ப வேண்டும் என்றும் அதுதான் ஆரோக்கியமான உணவு என்றும் அவர் வீடியோவில் பகிர்ந்து வந்தார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே அவ்வப்போது உடற்பயிற்சி உள்ளிட்ட விழிப்புணர்வுகள் குறித்து பேசி வருவதும் உண்டு. இது குறித்த வீடியோக்களை அவர் தனது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவதால் இந்த வீடியோக்கள் வளரும் இளைய தலைமுறைக்கு பெரும் ஊக்கமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது டிஜிபியாக பதவி உயர்வு பெற்றதை அடுத்து தன்னுடைய அனைத்து சமூக வலைதள கணக்குகளையும் தற்காலிகமாக அவர் முடக்கியுள்ளார். இதனால் அவரை பின்பற்றுபவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version