தமிழ்நாடு

கைதானவர்களை இரவில் கஸ்டடியில் வைக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

Published

on

குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை இரவில் கஸ்டடியில் வைக்கக்கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார் .

கடந்த ஆட்சியில் சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகிய இருவரும் கஸ்டடியில் வைக்கப்பட்டு விசாரணை போது கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல் இந்த ஆட்சியிலும் சென்னையில் காவல் நிலையத்தில் விக்னேஷ் என்பவர் கஸ்டடியில் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது .

இந்த நிலையில் அடுத்தடுத்து கஸ்டடி கொலை நடைபெற்று வருவதை அடுத்து டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி குற்ற வழக்குகளில் கைதானவர்களை இரவில் விசாரணை நடத்த கூடாது என்றும் மாலைக்குள் சிறையிலடைக்க வேண்டும் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அனைத்து மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version