தமிழ்நாடு

கந்தசாமியின் ‘ஆகஸ்ட் ஆபரேசன்’: அடுத்தடுத்து சிக்கும் தலைகள் இவர்களா?

Published

on

லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி கந்தசாமி அவர்கள் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்த போதே அதிமுகவின் பல தலைகளுக்கு ஸ்கெட்ச் வைத்து விட்டதாக கூறப்பட்டது. தற்போது கசிந்துள்ள தகவலின்படி ‘ஆகஸ்ட் ஆபரேஷன் என்ற ஒரு புதிய ஆபரேஷனை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி தொடங்கியுள்ளதாகவும் இதில் மேலும் பல அதிமுக பிரபலங்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை செய்த நிலையில் அடுத்த கட்டமாக ஜெயக்குமார் உள்பட ஒருசில பிரபலங்கள் ஆகஸ்ட் ஆபரேஷனில் சிக்குவார்கள் கூறப்படுகிறது.

மேலும் தேனில் உள்ள பிரமுகர் ஒருவர் வீட்டிலும் கோவையிலுள்ள பிரமுகர் ஒருவர் வீட்டிலும் விரைவில் ரெய்டு நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அதனை அடுத்து அனைவருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியாக சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர் வீட்டிலும் கை வைக்கப்போவதாக கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி கந்தசாமி அவர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முழு சுதந்திரமும் கொடுத்துள்ளதாகவும் ஆதாரம் சிக்கும் தருவாயில் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் அவர் தனது நடவடிக்கைகளை தொடரலாம் என்றும் கூறி இருப்பதாகவும் அதனால் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி களத்தில் அதிரடியாக இறங்கி ஒரு சில நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் மேலும் ஒருசில அதிமுக பிரபலங்களின் வீடுகளில் சோதனை நடத்தலாம் என்ற செய்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version