தமிழ்நாடு

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: பக்தர்களுக்கு அனுமதி வழங்கிய கோவில் நிர்வாகம்!

Published

on

மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டு நடைபெற்றாலும் கோவிட் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நிகழ்வுக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் 22ஆம் தேதி பட்டாபிஷேகம், 23ஆம் தேதி விஜயம், 24ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், 25ஆம் தேதி தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.

இதில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி 24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 12 30 மணி வரை பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியை பார்க்கலாம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் 15 ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை சுவாமி புறப்பாடு நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Trending

Exit mobile version