இந்தியா

திருப்பதியில் பக்தர்கள் திடீர் போராட்டம்: என்ன காரணம்?

Published

on

திருப்பதியில் பக்தர்கள் திடீரென போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருகின்றனர் என்பதும் இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒவ்வொரு நாளும் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் இல்லாமல் திருமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்க முடியாது என பக்தர்களிடம் போலீசார் தெரிவித்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பதியில் இலவச தரிசன கவுண்டர் திடீரென மூடப்பட்டதாகவும் திருப்பதி திருமலைக்கு செல்ல அனுமதி மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏப்ரல் 12ஆம் தேதி வரை ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தரிசன டிக்கெட் கவுண்டர் மூடப்பட்டது. இது குறித்து தகவல் தெரியாமல் ஏராளமானவர்கள் வழக்கம்போல் வரிசையில் டிக்கெட் வாங்குவதற்காக காத்திருந்தனர். ஆனால் கடைசிவரை கவுண்ட்டர்கள் திறக்கப்படவில்லை. டிக்கெட் இல்லாதவர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என போலீசார் கூறியதால் திடீரென பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Trending

Exit mobile version