தமிழ்நாடு

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்: அமாவாசை என்பதால் உள்வாங்கியதா?

Published

on

திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியதால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் .

தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபோது திருச்செந்தூரில் மட்டும் கடல் உள்வாங்கியது என்பதை அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

கடல் நீர் உள் வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிவதாகவும் கடல் பகுதிகளில் கிடைக்கக்கூடிய சிப்பி சங்குகளை பக்தர்கள் சேகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

இன்று அமாவாசை தினம் என்பதால் கடல்நீர் உள்வாங்கியதாக ஒரு தகவல் வெளிவருகிறது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் திடீரென கடல் உள்வாங்குவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது என்றும் இதனை அடுத்து திருச்செந்தூரில் இன்று கடல் உள்வாங்கியதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென கடல் உள்வாங்கியது குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

seithichurul

Trending

Exit mobile version