இந்தியா

நீண்ட இடைவெளிக்கு பின் சபரிமலையில் பக்தர்கள் அனுமதி!

Published

on

செப்டம்பர் 17ஆம் தேதி முதல் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு சபரிமலை பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடெங்கிலும் உள்ள வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு இருந்தன என்பதும், தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மத வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே.

தமிழகத்தை பொருத்தவரை வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் மத வழிபாட்டுத்தலங்கள் பக்தர்களுக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்கள் நிபந்தனையுடன் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் அதே நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் இதுவரை அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மட்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி என்று சபரிமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை கோவிலில் ஒருசில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதை அடுத்து கேரள அரசுக்கு தங்களது நன்றியை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version