சினிமா

தேவர் மகன் 2 எல்லா சாதிக்கும் எதிரான படம்.. கமல் பரபரப்பு பேட்டி

Published

on

சென்னை: தேவர் மகன் 2 படம் எல்லா சாதிக்கும் எதிரான படமாக இருக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு விஷயங்கள் குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்தார்.

அதில், தேவர் மகன் – 2 அனைத்து சாதியினருக்கும் எதிரான படம். தேவர் மகன் – 2 ஒரேயொரு சாதியை எதிர்க்கும் படம் கிடையாது. சாதி வேண்டாம் என்று நோக்கத்தில்தான் இந்த படம் எடுக்கப்படுகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அவர் அரசியலுக்கு வருவது அவரது உரிமை. அதை தடுக்க முடியாது.

பாலியல் குற்றச்சாட்டுகளை ஆராய வேண்டும். பாலியல் குற்றங்கள் எல்லா துறையிலும் உள்ளது. புகார்கள் வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது, என்றுள்ளார்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version