சினிமா செய்திகள்

தேவ் விமர்சனம்: காதலர் தினத்துக்கு ஏற்ற காதல் படம்!

Published

on

அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள தேவ் படம் காதல் மற்றும் வாழ்க்கையின் ரசனை விரும்பிகளுக்கான அட்வெஞ்சர் படமாக வெளிவந்துள்ளது.

அட்வெஞ்சர் விரும்பியான கார்த்தி எங்கே போனாலும் தனது நண்பர்களான விக்னேஷ்காந்த் மற்றும் அம்ருதாவை கூடவே கூட்டிச் செல்கிறார். இந்த நிலையில், தனது மேல் படிப்புக்காக வெளிநாடு செல்லும் போதும், இவர்களை உடன் அழைத்துச் செல்கிறார்.

கார்த்தியின் இந்த அன்பு தொல்லயால் கடுப்பாகும் விக்னேஷ் காந்த், கார்த்திக்கு ஒரு ஜோடியை பேஸ்புக்கில் தேடுகிறார்.

ஆண்கள் மேல் நம்பிக்கை இழந்து பெண்களால் அனைத்தும் சாத்தியம் என்ற தன்னம்பிக்கையில் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ள ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படத்தை பார்த்தவுடன் கார்த்திக்கு காதல் ஆரம்பிக்கிறது.

ஆண்களையே பிடிக்காத ரகுல் ப்ரீத் சிங்கை கார்த்தி எப்படி காதலில் விழ வைக்கிறார் என்பதே படத்தின் கதை.

பிளஸ்:

பையா கார்த்தி கம் பேக் ஆகியுள்ளார். பைக் ரேஸ், ஸ்கை டைவிங், கிணறு ஜம்ப் என கார்த்தி அட்வெஞ்சரில் அசத்துகிறார். காமெடியில் விக்னேஷ் காந்த் – கார்த்தி கூட்டணி அப்ளாஸ் அள்ளுகிறது. ரகுலின் அம்மாவாக நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், ரகுல் ப்ரீத் சிங்கின் காதல் காட்சிகள் ஹார்ஷ் ஜெயராஜின் பின்னணி இசை என அனைத்துமே படத்திற்கு பலம் கொடுக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவில் படம் முழுக்க அழகு ஓவியங்கள் தெரிகின்றன.

மைனஸ்:

விஜய்யின் மின்சார கனவு, விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தை பார்த்து இன்ஸ்பையர் ஆகி இயக்குநர் நாயகிக்கான கதையை உருவாக்கி இருப்பது. நாயகி எத்தனை போல்டாக இருந்தாலும், ஹீரோ கரெக்ட் செய்வார் என்பது தெரிந்த ஒன்றே, ஹாரிஷ் ஜெயராஜின் பாடல்கள் பழைய ஹிட் பாடல்களை ஒன்ஸ்மோர் போட்டது போல கேட்பது என படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளன.

எப்படி இருந்தாலும், காதலர் தினத்துக்கு எனர்ஜி கொடுக்கும் காதல் படமாகவும், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் விதமாக ஆக்‌ஷன், த்ரில்லர், காமெடி என அனைத்து விசயங்களும் தேவ் படம் ரசிகர்களுக்கு தர தவறவில்லை.

சினி ரேட்டிங்: 2.75/5.

Trending

Exit mobile version