இந்தியா

பணமதிப்பிழப்பு என்பது தனி மனிதர் செய்த பேரழிவு.. ஸ்டாலின் விமர்சனம்

Published

on

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தனி மனிதர் ஒருவர் செய்த பேரழிவு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2016 வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றோடு இரண்டு வருடம் ஆகிவிட்டது. இந்த நிலையில் இந்த நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ”மக்களின் பணம் செல்லாது என்று கூறப்பட்டு அவர்கள் தெருவிற்கு கொண்டு வரப்பட்டார்கள். முடிவில்லாத வரிசையில் மக்கள் காத்திருந்தார்கள், பல இந்தியர்கள் வங்கிக்கு வெளியே பலியானார்கள், பலர் வேலையை இழந்தனர், பல சிறு நிறுவனங்கள் மூடப்பட்டது, இந்திய பொருளாதாரம் பின்னோக்கி சென்றது.. இந்த நடவடிக்கை ஒரு தனி மனிதர் செய்த பேரழிவு” என்றுள்ளார்.

 

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version