இந்தியா

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துவரும் நிலையில் சமீபத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் இந்திய குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஹைதராபாத்தில் தங்கியுள்ளதாகவும், இதனை அடுத்து ஒரு வாரம் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்து உள்ளதாகவும் டுவிட்டரில் கூறியுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு வைத்துக்கொள்ளுமாறும் அவர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது துணை குடியரசுத் தலைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளதால் அவருக்கு லேசான கொரோனா பாதிப்பு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version