தமிழ்நாடு

அஜித்துக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்: துணை முதல்வர் ஓபிஎஸ்

Published

on

அஜித்துக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள் என தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த 46வது தமிழ்நாடு துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் கலந்துகொண்டு 3 தங்கப் பதக்கங்களையும் 4 வெள்ளிப் பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அவர் தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்து திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சற்றுமுன் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தனது டுவிட்டரில் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்து கூறியிருப்பதாவது:

தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்! துணை முதல்வரின் இந்த வாழ்த்து டுவிட்டுக்கு அஜித் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version