இந்தியா

சட்டசபையில் ஆபாச படம் பார்த்து சர்ச்சையில் சிக்கியவருக்கு கர்நாடகாவில் துணை முதல்வர் பதவி!

Published

on

கர்நாடகா சட்டசபையில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கிய லக்‌ஷ்மண் சங்கப்பா சாவடி என்பவருக்கு அம்மாநிலத்தின் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் சேர்த்து கோவிந்த் மக்தப்பா கரஜோல், அஸ்வத் நாராயணன் ஆகியோரும் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

லக்‌ஷ்மண் சங்கப்பா சவதி கர்நாடக எம்எல்ஏவாக இருந்தபோது சட்டசபைக்குள் அமர்ந்து செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் அவரை துணை முதல்வராக நியமித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேர்தலில் தோல்வியுற்ற ஒருவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏன்? என பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆனால், தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களே என் மீது நம்பிக்கை கொண்டு துணை முதல்வர் பதவி கொடுத்துள்ளனர். நான் கட்சியை வலுப்படுத்துவேன். அரசுக்கு நல்ல பெயர் பெற்றுத்தருவேன். எந்தப் பதவியையும் நான் கேட்கவில்லை. மூத்த தலைவர்கள் கொடுத்தார்கள் என கூறியுள்ளார் லக்‌ஷ்மன் சங்கப்பா சவதி.

காங்கிரஸ், மஜத கூட்டணியை வலுவிழக்கச் செய்வதில் முக்கிய பங்காற்றியதாலேயே லட்சுமண் சங்கப்பா சவதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசியலில் பேசப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version