தமிழ்நாடு

வங்கக்கடலில் வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

Published

on

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறாது என நேற்று வரை கணிக்கப்பட்ட நிலையில் தற்போது வலுப்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து நாளை வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகளை வந்தடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Trending

Exit mobile version