தமிழ்நாடு

பிரச்சாரத்தை திடீரென ரத்து செய்த கமல்: காரணம் இதுதான்!

Published

on

அதிமுக, திமுக ஆகிய இரண்டு வலிமையான கூட்டணிகளை எதிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியும் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 150 தொகுதிகளுக்கும் மேலாக போட்டியிடுகிறது என்பதும் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கமலஹாசன் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் என்பதும் நேற்று தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தைத் தொடர்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று குமாரபாளையத்தில் அவர் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். அதற்காக அவர் கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் குமாரபாளையம் செல்ல முயன்றபோது ஹெலிகாப்டர் குமாரபாளையத்தில் இறங்க அம்மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது

இதனால் ஈரோடு, நாமக்கல் மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தை கமல்ஹாசன் ரத்து செய்துவிட்டு தனது சொந்த தொகுதியிலேயே இன்றும் அவர் பிரசாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் நீதி மய்யத்தின் வெற்றியை தடுப்பதற்காகவே ஹெலிகாப்டர் இறங்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version