இந்தியா

நாடு முழுவதும் வேகமாக பரவு டெங்கு.. மத்திய அரசு எச்சரிக்கை!

Published

on

நாடு முழுவதும் டெங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பகுதியைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்குகாய்ச்சல் பரவல் அதிகமாகி வருகிறது. காய்ச்சல் பரவுவததை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் எந்த நடவடிக்கையும் குறைக்காமல் டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை அழிக்கும் வேலைகளைத் துரிதப்படுத்தவும், அனைத்து மருத்துவத் வாசதிகளுடன் கூடிய குழுக்களைத் தயார் நிலையை வைத்திருக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாநிலங்கள் ஒன்றிய அரசுக்கு விரைவாக அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும், அனைத்து மருத்துவமனைகளிலும் நோய்களைக் கண்டறிதல், சிகிச்சை மருந்துகள் உள்ளிட்ட தற்செயல் திட்டங்களைத் தீவிரப்படுத்தவும்.

கொசுக்களை ஒழிக்கும் பூச்சி மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டு எனவும் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version