இந்தியா

தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் வேகமாக பரவும் டெங்கு: மத்திய அரசு எச்சரிக்கை!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 9 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி தொடங்கி உள்ளதாகவும் அதனை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மத்திய அரசு குழுக்களை மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய ஒன்பது மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாகவும் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயமுள்ள டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தகுந்த சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சுகாதார துறைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டெங்கு பாதிப்பு மற்றும் பாதிக்கப்படாத மாநிலங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெங்கு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழகம் உள்பட 9 மாநிலங்களுக்கு மத்திய அரசின் மருத்துவ குழுவினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் மாநில சுகாதாரத் துறை இணைந்து டெங்கு கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் என்பது சாதாரண காய்ச்சல் போலில்லாமல் தலைவலி, உடம்பு வலி, கண்ணுக்கு பின்புறம் வலி, மற்றும் வயிற்று பகுதியில் வலி உண்டாகும் என்றும் இந்த அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version