உலகம்

ஊர் சுற்றும் கொரோனா: 111 நாடுகளில் வேகமாக பரவும் டெல்டா வைரஸ்!

Published

on

கொரோனா வைரஸ் முதல் அலை கடந்த ஆண்டும், இரண்டாவது அலை இந்த ஆண்டும் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு வகையில் பரவி வருகிறது.

டெல்டா, ஆல்பா, பீட்டா, காமா உள்ளிட்ட பல வகை வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது 111 நாடுகளில் டெல்டா வகை வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகில் 111 நாடுகளில் அதிக வீரியமுள்ள டெல்டா வைரஸ் பரவி வருவதாகவும், ஏற்கனவே பரவிவரும் ஆல்பா, பீட்டா, காமா வைரஸ்களைவிட டெல்டா வைரஸ் தான் ஆபத்து அதிகம் விளைவிக்கக் கூடியது என்றும் தெரிவித்துள்ளது.

இதனால் பொதுமக்களை பாதுகாக்க சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டியது ஒவ்வொரு நாட்டின் அரசின் கடமை என்றும், குறிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதில் அனைத்து நாடுகளும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகில் 178 நாடுகளில் ஆல்பா வைரஸ் காணப்படுகிறது என்றும் பீட்டா வைரஸ் 123 நாடுகளிலும், காமா வைரஸ் 75 நாடுகளிலும் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது நாடுகளுக்கு இடையே சர்வதேச போக்குவரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் நோயின் தாக்கம் மிக வேகமாக பரவி வருவதாகவும், எனவே உலகில் உள்ள 300 கோடி பேருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version