இந்தியா

தடுப்பூசி போட்டவர்களையும் விட்டுவைக்காத டெல்டா வைரஸ்: 3வது டோஸ் கட்டாயமா?

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என அனைத்து நாடுகளின் சுகாதார அமைச்சகங்கள் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. மேலும் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள மக்கள் தற்போது தடுப்பூசிகளை மிகுந்த ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர் என்பதும் ஒரு சில நாடுகள் 90 சதவீத மக்களுக்கு தடுப்பு ஊசியை செலுத்தி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொருத்தவரை தமிழகம் உள்பட நாடு முழுவதும் தடுப்பூசிகள் தினமும் லட்சக்கணக்கானவர்களுக்கு போடப்பட்டு வருகின்றன என்பதும் இதுவரை கோடிக்கணக்கான அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா வைரஸிலிருந்து முழு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கொரோனா வைரஸ் தாக்கினாலும், தடுப்பூசி போட்டவர்களுக்கு அதன் வீரியம் அதிகமாக இருக்காது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தடுப்பூசி போட்டவர்களையும் டெல்டா வைரஸ் விட்டுவைக்காமல் பாதித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் அதி வேகமாக பரவத் தொடங்கி விட்டதாகவும் அது தடுப்பூசி போட்டவர்களையும் விட்டு வைக்கவில்லை என்றும் விஞ்ஞானிகள் தற்போது எச்சரித்துள்ளனர். இதனை அடுத்து டெல்டா வைரஸ் காரணமாக மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி போட வேண்டுமா என்பது குறித்து ஆய்வு உலக சுகாதார மையம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version