ஆரோக்கியம்

சுவையான கோதுமை மாவு போண்டா – 5 நிமிடத்தில் ரெடி!

Published

on

இந்த சுவையான கோதுமை மாவு போண்டா செய்ய 5 நிமிடங்களுக்கு மேல் ஆகாது! குழந்தைகளுக்கு மதிய ஸ்nack-ஆகவோ அல்லது மாலை நேர tea-time-க்கு சாப்பிடவோ கொடுக்க லாம். இது ஆரோக்கியமானது மற்றும் செய்வதும் எளிது.

கோதுமை போண்டா செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/4 கப்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
துருவிய இஞ்சி – 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
புதினா – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, புதினா, துருவிய இஞ்சி, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • எண்ணெய் நன்கு சூடானதும், பிசைந்து வைத்த மாவில் இருந்து சின்ன சின்ன உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  • போண்டா நல்ல பொன்னிறமாக மாறியதும் எண்ணெயிலிருந்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
  • சுவையான கோதுமை மாவு போண்டா ரெடி! தேங்காய் சட்னி உடன் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்புகள்:

  • போண்டா மாவு அதிகமாக தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • எண்ணெய் நன்றாக சூடானதும் மட்டுமே போண்டா போடவும், இல்லையெனில் போண்டா கச்சிதமாக பொரியாமல் மாவாகிவிடும்.
  • பொன்னிறமாக மாறியதும் போண்டாவை எண்ணெயிலிருந்து எடுத்து விடவும், அதிக நேரம் எண்ணெயில் வைத்திருந்தால் போண்டா கடினமாகிவிடும்.
  • சுவையான கோதுமை மாவு போண்டா செய்து சுவைத்து மகிழுங்கள்!
author avatar
Poovizhi

Trending

Exit mobile version